உப்பிலியபுரம் அருகே கோவில் முன்பு இருந்த சாமி சிலை சேதம்


உப்பிலியபுரம் அருகே கோவில் முன்பு இருந்த சாமி சிலை சேதம்
x
தினத்தந்தி 12 Jun 2017 4:00 AM IST (Updated: 12 Jun 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரம் அருகே கோவில் முன்பு இருந்த சாமி சிலை சேதம்

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வைரிசெட்டிப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு ஒரு சாமி சிலை இருந்தது. கோவிலில் பூஜைகள் நடைபெறும்போது, அந்த சிலைக்கு முதலில் தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பின்னரே கோவிலில் பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் குடிபோதையில் அந்த சிலையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story