பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பொதுக்குழுவில் தீர்மானம்


பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பொதுக்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 Jun 2017 4:15 AM IST (Updated: 12 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊர்தி ஓட்டுனர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமை சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் எவரெஸ்ட் வரவேற்றார்.

இதில் மாவட்ட அவை தலைவர் குருராஜ், மாவட்ட தலைவர்கள் முனிகிருஷ்ணன், ராஜரத்தினம், ராஜேஷ், மாவட்ட செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் பேசினர்.

7-வது ஊதியக்குழு பரிந்துரை

கூட்டத்தில், புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊர்தி ஓட்டுனர்கள் அனைவரும் தர ஊதியம் பெற்ற பிறகு 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். குடும்ப நலத்துறைக்கு புதிய வாகனங்கள் வாங்க அந்த துறையின் இயக்குனர் அரசுக்கு அனுப்பிய கருத்துருவை தமிழகஅரசு நிராகரித்துள்ளது. குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்பக்கூடாது எனவும், பணிகளுக்கு வாடகை வாகனத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story