மத்திய உள்துறை மந்திரியுடன் நாராயணசாமி சந்திப்பு


மத்திய உள்துறை மந்திரியுடன் நாராயணசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 11 Jun 2017 11:15 PM GMT (Updated: 2017-06-12T04:45:25+05:30)

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசினார். அவரிடம் புதுவை கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கை குறித்து புகார் தெரிவித்தார். மேலும் மத்திய சுகாதாரத்துறை செயலாளரை சந்தித்து சென்டாக் மருத்துவ முதுகலை படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

ராஜ்நாத்சிங்குடன் சந்திப்பு

இந்தநிலையில் நேற்று நடந்த சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். அதன்பின் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடமும் புதுவை கவர்னரின் நடவடிக்கை குறித்து புகார் கூறினார். மேலும் புதுவை மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Next Story