அணுசக்தி நிறுவனத்தில் அதிகாரி வேலை


அணுசக்தி நிறுவனத்தில் அதிகாரி வேலை
x
தினத்தந்தி 12 Jun 2017 7:04 AM GMT (Updated: 12 Jun 2017 7:04 AM GMT)

என்.பி.சி.ஐ.எல். நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் (டிரெயினி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் (டிரெயினி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதிகபட்சம் மெக்கானிக்கல் பிரிவில் 52 இடங்களும், கெமிக்கல் – 12, எலக்ட்ரிக்கல் – 30, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் – 8, இன்மென்டேசன் – 8, சிவில் – 40 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள், 15–6–2017–ந் தேதியில்  26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 29 வயது வரையும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 31 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் தங்கள் பிரிவுக்கு ஏற்ப 10 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், இன்ட்ஸ்ருமென்டேசன், சிவில் போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக். பி.எஸ்சி. என்ஜினீயரிங், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

தேர்வு செய்யும் முறை:

கேட்–2017 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15–6–2017–ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான நேர்காணல் உத்தேசமாக ஜூலை மாதம் 10–ந் தேதி முதல் 17–ந் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்   www.npcilcareers.co.in   என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Next Story