முப்படை அதிகாரி பணிகளுக்கு 390 இடங்கள்


முப்படை அதிகாரி பணிகளுக்கு 390 இடங்கள்
x
தினத்தந்தி 12 Jun 2017 1:21 PM IST (Updated: 12 Jun 2017 1:21 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ராணுவ அகாடமிகளில் 390 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பிளஸ்–2 படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.


இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு–2017(2) {என்.டி.ஏ.– என்.எ.–2–2017} என்ற தேர்வு மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இந்திய மிலிட்டரி அகாடமியில் 208 பேரும், இந்திய கடற்படை அகாடமியில் 55 பேரும், விமானப்படை அகாடமியில் 72 பேரும், நேவல் அகாடமி (பிளஸ்–2 என்ட்ரி) தேர்வு மூலம் 55 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியுடன் கூடிய இந்த அதிகாரி பணியிடங்களுக்கு மொத்தம் 390 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்....

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 2–1–1999 மற்றும் 1–1–2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 

கல்வித்தகுதி:

பிளஸ்–2 படிப்பை 10+2 முறையில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உளவியல்திறன் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.பி. நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

உடல்தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 என்ற அளவிலும், கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவிலும் இருக்க வேண்டும். வயதிற்கு ஏற்ற உயரம், எடை, பார்வைத்திறன் அளவுகளை இணையதளத்தில் 
பார்க்கலாம்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஸ்டேட் வங்கி கிளைகளிலோ அதன் துணை வங்கிகளிலோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்   www.upsconline.nic.in  என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்–1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்–2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 30–6–2017

கூடுதல் விவரங்களை பார்க்க www.joinindianarmy.nic.in, www.upsc.gov.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம்.

Next Story