களையெடுக்கும் ரோபோ
தொழில்நுட்ப வளர்ச்சியால் களைகளை எளிதில் அகற்றவும் ரோபோ வந்தவிட்டது.
விவசாயத்தில் களையெடுத்தல் பணி மிக முக்கியமானது. தாவரங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தி, மகசூலை பெருக்க களையெடுத்தல் அவசியமாகிறது. களைச்செடிகளை சரியாக இனம் கண்டு அகற்றுவது சவால் நிறைந்த பணி. எண்ணிக்கையில் அதிகமான ஊழியர்களைக் கொண்டுதான் அதிக பரப்பளவிலான களைகளை அகற்ற முடியும்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் களைகளை எளிதில் அகற்றவும் ரோபோ வந்தவிட்டது. அமெரிக்க தொழில் முனைவோரான ஜோயி ஜோன்ஸ் என்பவர் களையெடுக்கும் ‘டெர்டில்’ ரோபோவை வடிவமைத்துள்ளார். இது சூரிய சக்தி மூலம் ஆற்றல் பெற்று இயங்கும், எல்லா காலநிலைக்கும் ஏற்றது. அதாவது வெயில் – மழைக்காக நீங்கள் ஓய்வெடுத்தாலும் களைப்பின்றி களையெடுக்கக் கூடியது இந்த ரோபோ. இதில் உள்ள சென்சார்கள், களைகளை எளிதாக இனம் காணக்கூடியது. பெரிய களைகளாகவோ, தடைகளாகவோ இருந்தால் ஆழமாக தோண்டி அப்புறப்படுத்தக் கூடியது. இந்த ரோபோவை, 300 அமெரிக்க டாலர் விலையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார் அதன் தயாரிப்பாளர்.
Related Tags :
Next Story