நீலகிரிக்கு நெருக்கடி இல்லாமல் செல்ல 3-வது பாதை அமைக்கப்படுமா?
நீலகிரிக்கு நெருக்கடி இல்லாமல் செல்ல 3-வது மலைப்பாதை அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கோடை சீசனில் தவிக்கும் நிலை உள்ளது.
ஊட்டி,
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என காணப்படும் தேயிலை தோட்டம், பள்ளத்தாக்குகள், மலையை வந்து மோதும் மேக கூட்டம் என மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரிக்கு இயற்கை அன்னையின் தாலாட்டு எப்போதும் உண்டு. இந்த தாலாட்டில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதனால் கிடைக்கும் மனமகிழ்ச்சி, மலைப்பயணத்தால் காணாமல்போய் விடுகிறது.
போக்குவரத்து நெரிசல்
கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைப்பயணம் ஆரம்பமாகி குன்னூர் வழியாக ஊட்டி வரை சென்று பயணம் முடிகிறது. இந்த மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலைப்பாதை இருவழிச்சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் கனரக வாகனங்கள் சிக்கிக்கொண்டால் மற்ற வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
அதே போல ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் சீசன் காலங்களிலும் விடுமுறை நாட்களிலும், மலர் கண்காட்சி நடைபெறும் 3 நாட்களும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக(61.2 கி.மீட்டர்) திருப்பி விடப்படுகின்றன. மேட்டுப்பாளையம்- குன்னூர் பாதை(52.1 கி.மீட்டர்) ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
27 பேர் பலி
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல குன்னூர் வழியாகவும், கோத்தகிரி வழியாகவும் செல்லலாம். இந்த பாதையை விட்டால் வேறுவழி கிடையாது. மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டாலோ, மரங்கள் விழுந்தாலோ இந்த பாதைகளில் வாகன போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டு விடும். எனவே ஊட்டிக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.ஆனால் இதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் தற்போது அவை முடங்கி போய் விட்டது.
மேலும் மலைப்பாதையில் சமீபகாலமாக விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அனுபவமில்லாத டிரைவர்கள் வாகனங்களை இயக்குவதுதான். கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நடந்த 23 விபத்துகளில் 27 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். எனவே மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு அனுபவம் முக்கியம்.
இதுகுறித்து ஊட்டி வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் ஹீராலால் கூறியதாவது:-
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது
நீலகிரி மாவட்டம் என்றாலே குளு, குளு கால நிலை தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் மாவட்டத்தின் நிலைமை பரிதாபம் தான். போக்குவரத்துக்கு உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டால் அவ்வளவு தான். கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கூடலூர் வழியாக கொண்டுவரப்பட்டன. அப்போது மக்கள்பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு 3-வது மாற்றுப்பாதை அமைக்க அப்போதைய கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை, காரமடை வழியாக செல்லும் சாலையை 3-வது மாற்றுப்பாதையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் மஞ்சூரில் இருந்து காரமடை 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 28 கிலோ மீட்டர் தூரம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை ஆகும். கெத்தை பகுதியில் 9 கிலோ மீட்டர் தூரம் மின்வாரியத்துக்கு சொந்தமானது. மற்றபகுதி கோவை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சாலையை அகலப்படுத்த மொத்தம் 26 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டி இருந்தது.
3-வது மாற்றுப்பாதை
இதற்காக வனத்துறையிடம் இருந்து கையகப்படுத்தப்பட உள்ள நிலத்துக்கு பதில், வருவாய்த்துறை நிலம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் 3-வது மாற்றுப்பாதைக்காக சாலையை அகலப்படுத்த ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறையினர் அரசுக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் வனத்துறையினர் நிலத்தை ஒப்படைக்கவில்லை. இதன் காரணமாக 3-வது மாற்றுப்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதே போல ஊட்டி, கைக்காட்டி, ஆருக்குச்சி, கொலக்கம்பை, சாம்பூர், பரளி, கீழ்முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைத்த பிறகு, அடர்ந்த காட்டுப்பகுதி என்று கூறி, வனத்துறையினர் அங்கு சோதனைச்சாவடி அமைத்து, வாகனங்கள் செல்ல தடை விதித்து விட்டனர். இதனால் இந்த பாதையும் தற்போது பயன்படாமல் உள்ளது.
ஆனால் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் 3-வது மாற்றுப்பாதை என்பது அத்தியாவசியமானது. அத்துடன் ஹெலிகாப்டர் சேவை, ரோப் கார் வசதி ஆகியவை குறித்தும்,மலை ரெயிலின் கூடுதல் சேவைகுறித்தும் ஆலோசிக்க வேண்டும். மலைகளின் அரசியை நெருக்கடி இல்லாமல் தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோடை சீசனில் தினசரி தவிக்க வைக்கும் நிலையை மாற்றவும், எப்போதும் நெருக்கடி இல்லாமல் நீலகிரிக்கு செல்லும் நிலையை உருவாக்கவும் 3-வது மலைப்பாதை அமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Tags :
Next Story