மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை
மும்பையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் தொடங்கி உள்ளது.
மும்பை,
மும்பையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் தொடங்கி உள்ளது.
கட்டுப்பாட்டு அறைமும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் (எம்.எம்.ஆர்.ஏ.) மும்பையில் மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மழைக்காலத்தினையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பெருநகர வளர்ச்சி குழுமம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை, ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பை பெநகர வளர்ச்சிக்குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மழைக்காலத்தின் போது, பொதுமக்களுக்கு உதவும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் காண்டிராக்டர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹெல்ப்லைன் எண்மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நடக்கும் இடங்களில் மரம் முறிந்து விழுந்தாலோ, தண்ணீர் தேங்கி நின்றாலோ, விபத்து போன்ற சமயங்களில் மும்பைவாசிகள் கட்டுப்பாட்டு அறையின் உதவியை அழைக்கலாம். இந்த கட்டுப்பாட்டு அறையானது ரெயில்வே, மும்பை மாநகராட்சி, போக்குவரத்து போலீஸ், தீயணைப்பு படையுடன் இணைந்து செயல்படும்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடங்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறையை மழைக்கால இடர்பாடுகள் குறித்த தகவல்களை தெரிவிக்கவோ, அறிந்து கொள்ளவோ 26591241, 26594176, 8080705051 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர 1800228801 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொண்டும் பேசலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.