பாலியல் தொல்லை காரணமாகஆசிரியை தற்கொலை: தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
பாலியல் தொல்லை காரணமாக ஆசிரியை தற்கொலை செய்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டணை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு சண்முகா நகரை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 45). இவர் ஆலங்குடி அருகே உள்ள தெற்கு ராயப்பட்டி ஆரம்ப தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், புதுக்கோட்டை ஊர்காவல் படையிலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஆரம்ப தொடக்க பள்ளியில் புதுக்கோட்டை காமராஜபுரம் 25-ம் வீதியை சேர்ந்த வீராச்சாமி மனைவி புவனேஸ்வரி (35) ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
ஆசிரியை தற்கொலை
இந்நிலையில் மதிவாணன், ஆசிரியை புவனேஸ்வரிக்கு பள்ளியிலும், தொலைபேசி மூலமாகவும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 7.5.2015-ந் தேதி புவனேஸ்வரி வீட்டில் இருந்தபோது மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி தொந்தரவு செய்தார். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 ஆண்டு சிறை
இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் மதிவாணனை கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி நேற்று தீர்ப்பு கூறினார். இதில் மதிவாணன், புவனேஷ்வரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறையும், மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story