100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்வதாக கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை கலெக்டரிடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வரப்பெற்ற மனுக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், குடும்ப அட்டை கோருதல், அடிப்படை வசதிகள் கோரி வரப்பெற்ற மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் போன்ற 248 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மேலமங்களத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு சலவை பெட்டியை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.5 ஆயிரம் பிடித்தம்
கூட்டத்தில் தேவகோட்டை தாலுகா வீரை ஊராட்சியை சேர்ந்த வேலாயுதபட்டினம் கிராம விவசாய கூலி தொழிலாளர்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வீரை ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபட்டினம், எத்தினி, நடுவீரை, வெற்றியாளங்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகிறோம். தற்போது வீடுகளில் குடும்ப அட்டை அடிப்படையில் தனிநபர் கழிப்பறை கட்டப்படுகிறது. இந்த திட்டத்தில் கழிப்பறை கட்ட அரசு வழங்கும் நிதியை விட கூடுதல் செலவாகிறது என்பதற்காக 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறுகின்றனர். இவ்வாறு செய்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பணம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

Related Tags :
Next Story