விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை என விவசாய சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
திருவாரூர்,
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அரை நிர்வாண ஓட்டம் நடைபெற்றது. இதன் நிறைவாக திருவாரூர் கீழவீதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை. 60 ஆண்டு காலமாக நீர் நிலைகளை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான எந்த திட்டமும் அரசிடம் இல்லை.
போராட வேண்டும்
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் கிணறுகள் உள்ளன. ஒரு நாளைக்கு ரூ.25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. விவசாயத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் பாலா, நிர்வாகிகள் ஜோதிபாசு, வேலவன், ரகுராமன், செந்தில், ஸ்டாலின், பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story