ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் தெப்பக் குளத்தை தூர்வாரும் பணியை உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் தெப்பக் குளத்தை தூர்வாரும் பணியை உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
தூர்வாரும் பணிஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் வகுளகிரி மலையில் வெங்கடாசலபதி கோவிலும், மலை அடிவாரத்தில் குலசேகரநாயகி சமேத மார்த்தாண்ட ஈசுவரர் கோவிலும் உள்ளது. இதன் அருகில் உள்ள தெப்பக்குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், தெப்பக் குளத்தை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.
உதவி கலெக்டர்தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘கருங்குளத்தில் உள்ள கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எனவே பக்தர்களின் வசதிக்காக தெப்பக் குளத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர், நடைபாதை மற்றும் மின் விளக்கு, குடிநீர் வசதி அமைக்கப்படும். தெப்பக்குளம் அருகில் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இங்கிருந்து அள்ளப்படும் கரம்பை மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும், என்று கூறினார்.
அமலைச் செடிகள்தெப்பக்குளத்தில் உள்ள அமலைச் செடிகள், முட்செடிகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் தோண்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், துணை தாசில்தார்கள் முருகேசன், ஜஸ்டின், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஞானசேகர், வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.