இரட்டை இலை சின்னத்தை விரைவில் மீட்போம் நெல்லையில் மனோஜ்பாண்டியன் பேட்டி

இரட்டை இலை சின்னத்தை விரைவில் மீட்போம் என்று நெல்லையில் முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் கூறினார்.
நெல்லை,

மேடை அமைக்கும் பணி
அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 18–ந்தேதி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணி நடந்த வருகிறது. இந்த பணியை முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும். கூட்டத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அ.தி.மு.க. இணைப்பு பேச்சுவார்த்தை குழு எதற்காக கலைக்கப்பட்டது என்பது குறித்துமுன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தற்போது தீபா கூறுகிறார். ஆரம்பத்தில் இருந்தே இந்த கருத்தை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். எங்களிடம் தான் பொருளாளர், அவைதலைவர் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., தலைமைக்கழகமும் எங்களுடையது தான்.
இரட்டை இலை சின்னத்தை...
இரட்டை இலை சின்னத்தை விரைவில் மீட்போம் அதற்கான பிரமாணபத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து உள்ளோம். இரட்டை இலையை மீட்க இன்னும் பிரமாணபத்திரங்களை தாக்கல் செய்ய தொண்டர்கள் தயாராவும் உள்ளனர். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாராகவும், முதல்–அமைச்சராகவும் ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அது விரைவில் நிறைவேறும். அ.தி.மு.க.விற்கும் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு மனோஜ்பாண்டியன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், நிர்வாகிகள் ஏ.கே.சீனிவாசன், பரமசிவன், முகைதீன்ஷா, நாலடியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story