அரசு பஸ் மீது ஆம்புலன்ஸ் மோதல் 3 பேர் காயம்


அரசு பஸ் மீது ஆம்புலன்ஸ் மோதல் 3 பேர் காயம்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 9:19 PM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே அரசு பஸ் மீது ஆம்புலன்ஸ் மோதல் 3 பேர் காயம்

அழகியமண்டபம்,

தேங்காப்பட்டணத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று காலை ஒரு அரசு பஸ்  சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் இரணியல் அருகே நுள்ளிவிளை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த ஆம்புலன்ஸ்  ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பக்கம் மோதியது. இதில் ஆம்புலன்ஸ் முன் பகுதி நொறுங்கியது. மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். உடனே அருகில் நின்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story