சென்னையில் இருந்து சரக்குரெயிலில் 1,239 டன் உரம் தஞ்சைக்கு வந்தது


சென்னையில் இருந்து சரக்குரெயிலில் 1,239 டன் உரம் தஞ்சைக்கு வந்தது
x
தினத்தந்தி 14 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 11:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து சரக்குரெயிலில் 1,239 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் வராததால் குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகின. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டும் நெல் சாகுபடி நடைபெற்றது.

இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றை நம்பியே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம்.

உரம்

இந்தநிலையில் சென்னை மணலியில் இருந்து சரக்குரெயிலின் 17 வேகன்களில் 990 டன் யூரியா உரமும், 4 வேகன்களில் 249 டன் காம்ப்ளக்ஸ் உரமும் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் உர மூட்டைகளை லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றினர். இதையடுத்து இந்த உர மூட்டைகள் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த உரம் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும்.


Related Tags :
Next Story