வடக்குமாதவி மகா முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

பெரம்பலூர்,
பெரம்பலூரை அடுத்த வடக்குமாதவி ஊராட்சியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சொரிதல் விழா கடந்த மே மாதம் 30-ந்தேதி நடந்தது. இதனை தொடர்ந்து திருவிழா கடந்த 6-ந்தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோனேரி ஆற்றில் இருந்து சாமி குடி அழைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மகா முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இரவு மகா முத்துமாரியம்மன் பல்வேறு வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. நேற்று முன்தினம் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று காலை மகா முத்துமாரியம்மன் மஞ்சள் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மகா முத்துமாரியம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மகா முத்துமாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து நாதஸ்வர இசை, மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக முக்கிய வீதிகளில் தேர் அசைந்து ஆடி வந்தது. பின்னர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (புதன் கிழமை) சுவாமி புறப்பாடு மஞ்சள் நீராட்டு மற்றும் குடிவிடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு அடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.

Related Tags :
Next Story