விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2017 3:45 AM IST (Updated: 14 Jun 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம்

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு விதித்த தடையை கண்டித்து மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கலையரசன், மாநில துணை செயலாளர் பெரியசாமி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் வீரசெங்கோலன் கலந்து கொண்டு பேசினார். அதனை தொடர்ந்து அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த மாட்டு இறைச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்டு மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதில் கடலூர் மாவட்ட செயலாளர் கதிர்வாணன், சிதம்பரம்-கடலூர் மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், மாநில துணை செயலாளர் அன்பானந்தம் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
1 More update

Related Tags :
Next Story