காளியம்மன் கோவில் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


காளியம்மன் கோவில் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:30 AM IST (Updated: 14 Jun 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

வி.கைகாட்டி அருகே காளியம்மன் கோவில் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே முனியங்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைக்க ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்நிலையில் காளியம்மன் கோவிலை இந்த கிராமத்தில் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்நிலையில் கோவில் கட்டி வழிபாடு தீவிரமாக நடைபெற்று வந்தது.

சாலை மறியல்

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைத்ததால் பாதிப்பு ஏற்படும் என்று கூறி முனியங்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வி.கைகாட்டி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதானால் முனியங் குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story