பாபநாசத்தில் தீ விபத்து 20 பனை மரங்கள் எரிந்து நாசம்


பாபநாசத்தில் தீ விபத்து 20 பனை மரங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 14 Jun 2017 3:30 AM IST (Updated: 14 Jun 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அருகே மூங்கில் தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகே இருந்த பனை மரங்கள் மீது பிடித்து 20 பனை மரங்கள் எரிந்து நாசமடைந்தன.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடமுருட்டி ஆற்றங்கரை அருகில் மூங்கில் தோப்புகள் உள்ளன. இந்தநிலையில் அந்த வழியாக சென்ற ஒருவர் சிகரெட்டை அணைக்காமல் இந்த மூங்கில் தோப்பில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மூங்கில் தோப்பில் தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகில் இருந்த பனை மரங்களுக்கும் பரவியது. இதில் சுமார் 20 பனை மரங்கள் எரிந்து நாசமடைந்தன. மேலும் தோப்பில் இருந்த மூங்கில் மரங்களும் நாசமடைந்தன.

தீயை அணைத்தனர்

இது குறித்து அய்யம்பேட்டை வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

20 பனைமரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தது பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story