காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்க திட்டம்


காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்க திட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:15 AM IST (Updated: 14 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

கரூரை மேம்படுத்த இந்திய தொழில் கூட்டமைப்பு புதிய முயற்சி எடுத்துள்ளது. காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்க முடிவு செய்துள்ளது.

கரூர்,

கரூர் நகரில் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதேபோல இதர வணிக நிறுவனங்களும் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில் கரூரை மேம்படுத்த இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ‘விஷன் கரூர்’ என்ற அடைமொழியுடன் தொலைநோக்கு திட்டத்தை கொண்டு பல்வேறு திட்டங்களை தொழில் அதிபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி கரூரில் ஒரு ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். முன்னாள் தலைவர் சுதாகர் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ‘விஷன் கரூர்’ என்ற திட்டம் குறித்தும், அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சங்கர் எடுத்துரைத்து பேசினார்.

மரம் வளர்த்தல்

நிகழ்ச்சியில் கரூர் நகரத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில்அதிபர்கள் கலந்து கொண்டனர். திட்டம் குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாநகரங்களில் தொழில்அதிபர்கள், தன்னார்வலர்கள் இணைந்து அந்நகரங்களை மேம்படுத்தி உள்ளனர். மரம் வளர்த்தல், குளம் தூர்வாருதல், மழை நீரை தேக்க புதிய வசதி உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். தொழிலையும் மேம்படுத்தி உள்ளனர். அதேபோல கரூர் நகரத்திலும், மாவட்டத்திலும் பல்வேறு பணிகளை செய்ய

‘விஷன் கரூர்’ என்ற திட்டத்தை தற்போது தொடங்கி உள்ளோம்.

காற்றின் ஈரப்பதத்தில்...

முதல்கட்டமாக காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் எடுத்து அதனை வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருவிகளை தொழில்அதிபர்களின் பங்களிப்போடு வாங்கி ஒரு கிராமத்தில் நிறுவப்படும். அதன்பிறகு குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள இடங்களில் அந்த கருவியை நிறுவப்படும். இந்த கருவியை உற்பத்தி செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினர்.

கூட்டத்தில் தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story