சொக்கனூரில் வீட்டுமனைப்பட்டா கேட்டு சாலை மறியல்
சொக்கனூரில் வீட்டுமனைப்பட்டா கேட்டு சாலை மறியல்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீட்டுமனைப்பட்டாகிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித் துள்ளதாகவும், அதனை மீட்டு பொதுமக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்துறையினரிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் சொக்கனூரில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் சொக்கனூரில் இருந்து வீரப்பக்கவுண்டனூர் செல்லும் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைஇது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கிணத்துக்கடவு தாசில்தார் பொன்னம்மாள், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், தெய்வேந்திரன், கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் மோகன்பாபு, கிராம நிர்வாக அலுவலர் விமல்மாதவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தாசில்தாரிடம், இங்கு தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ள இடத்தை மீட்டு எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி வீடுகட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
காலி செய்ய வேண்டும்பின்னர் அந்த பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள நபர்களிடம் தாசில்தார் பொன்னம்மாள் கூறும்போது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதை விட்டுவிட்டு ஒரு வாரத்திற்குள் இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வருவாய்த்துறை மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.