வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ‘தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்’


வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ‘தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்’
x
தினத்தந்தி 14 Jun 2017 4:00 AM IST (Updated: 14 Jun 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் என்று பொன்முடி எம்.எல்.ஏ. பேசினார்.

அரசூர்,

விழுப்புரம் மத்திய மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், ஒன்றிய தலைவர் கந்தசாமி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் விசுவநாதன் வரவேற்றார். மாநில இலக்கிய அணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான தென்னவன், தலைமை கழக பேச்சாளர் கோபி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேசியதாவது:–

சட்டமன்ற தேர்தல் வரும்

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விலைபேசி விற்கப்படுகின்றனர். மக்களுக்காக எந்நேரமும் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரே தலைவர் கருணாநிதி ஒருவர்தான். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களின் குறைகளை நிறைவேற்ற தொகுதி பக்கம் வருவதில்லை. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் சடகோபன், மோகன்ராஜ், மாதவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜ்மோகன், விஜயபாபு, விஜய்கிருஷ்ணராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் பூக்கடைகணேசன் நன்றி கூறினார்.


Next Story