மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்கு பணம் கொடுக்கப் பட்டதாக கூறிய வீடியோ பேச்சு தொடர்பாக சட்ட சபையில் விவாதிக்க சபா நாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் இருந்து அவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார்.
எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபையை விட்டு வெளியேறினர். சட்டசபை வளாகத்தை விட்டு வெளியே வந்த அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜாஜி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் சாலை மறியல்
தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு நகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் காரல்மார்க்ஸ், து.செல்வம், அஞ்சுகம்பூபதி, எல்.ஜி.அண்ணா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது அவர்கள், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

Related Tags :
Next Story