மாவட்டம் முழுவதும் பலத்த மழை சிவகங்கையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது


மாவட்டம் முழுவதும் பலத்த மழை சிவகங்கையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
x
தினத்தந்தி 15 Jun 2017 3:15 AM IST (Updated: 15 Jun 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சிவகங்கையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர். பலத்த மழை சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் முன்பு 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இதனையடுத்து கடந்த

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சிவகங்கையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர்.

பலத்த மழை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் முன்பு 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக மழையின்றி வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று காலை வெயில் சூட்டெரித்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், இளையான்குடி தவிர சிவகங்கை, திருப்பத்தூர், திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

சிவகங்கை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. மேலும் கால்வாய்களில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. சிவகங்கை நகர் காந்திவீதி, சிவன் கோவில் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்கள் நிறைந்து கழிவுநீருடன் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அவதியுற்ற அப்பகுதி மக்கள் வீடுகளில் தேங்கிய மழைநீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.

திருப்பத்தூர்

இதேபோல் திருப்பத்தூர் பகுதியில் 1½ மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சிங்கம்புணரி, பிரான்மலை பகுதிகளிலும் ஓரளவு மழை கொட்டியது. இதேபோன்று திருப்புவனம், காளையார்கோவில், காரைக்குடி ஆகிய பகுதிகளிலும் மழைப்பொழிவு இருந்தது.


Related Tags :
Next Story