மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டம்


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:30 AM IST (Updated: 15 Jun 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 489 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி 4-ரோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சேட்டு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் முன்னிலை வகித்தார். இதில் சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் பொன்.மகேஸ்வரன், அன்பழகன், ரகீம், செல்லதுரை, முத்துலட்சுமி, முன்னாள் கவுன்சிலர் பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோன்று நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் சார்பில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து அதியமான்கோட்டையில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வீரமணி, ஆறுமுகம், ரெங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இண்டூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர். பென்னாகரம் பஸ்நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம், நகர செயலாளர் வீரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி - கடத்தூர்

பாப்பிரெட்டிப்பட்டி பஸ்நிலையத்தில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் நடந்த போராட்டத்தில் நகர செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடத்தூர் பஸ்நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் முனிராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அரூர் கச்சேரி மேட்டில் தி.மு.க.சார்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சண்முகநிதி, தேசிங்குராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. வேடம்மாள், நிர்வாகிகள் பழனி, தமிழழகன், சண்முகம், நேரு சுகுமார், குப்பன், சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மொரப்பூர், பொம்மிடி ஆகிய இடங்களிலும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 187 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிழக்கு மாவட்ட செயலாளர் சுகவனம் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, சுப்பிரமணி உள்ளிட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ரகு தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது. இந்த சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். பர்கூரில் பஸ்நிலையம் முன்பு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் பாலன், மாவட்ட பிரதிநிதி நாகராசன், காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர், சூளகிரி

ஓசூர் நகர செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில் ஓசூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோகித் நாதன் தலைமையில் ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாதேஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், நகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரா மணி மற்றும் சரவணன், கண்ணன் உள்பட 42 பேரை கைது செய்தனர்.

இதே போல சூளகிரியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்பு சேகரன் உள்பட 15 பேர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

302 பேர் கைது

ஊத்தங்கரை 4 ரோட்டில் ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் நகர செயலாளர் பாபு சிவக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினி செல்வம், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மாலதி நாராயணசாமி உள்பட சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். சிங்காரப்பேட்டை அண்ணா சிலை அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு கிளை செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அஞ்செட்டியில் ஒன்றிய செயலாளர் காதர் பாட்சா தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். போச்சம்பள்ளியில் ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் கலந்துகொண்ட மாவட்ட துணை அமைப்பாளர்கள் வடிவேலன், அரசு, பாண்டியன், ஒன்றிய அமைப்பாளர் எல்லப்பன், மாவட்ட பிரதிநிதி நேதாஜி அன்பு உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 302 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story