மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில் 5 பெண்கள் உள்பட 171 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் குமரி மாவட்டத்திலும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் நேற்று பிற்பகலில் நாகர்கோவில்– கன்னியாகுமரி சாலையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு தி.மு.க. மீனவர் அணி மாநில செயலாளர் ரா.பெர்னார்டு தலைமை தாங்கினார். பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நிர்வாகிகள் சேக்தாவூது, தில்லைச்செல்வம், சி.என்.செல்வன், சிவராஜ், வக்கீல் உதயகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
171 பேர் கைது
அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 3 பெண்கள் உள்பட 54 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
இதேபோல் ராஜாக்கமங்கலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரும், ஈத்தாமொழியில் மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 25 பேரும், தக்கலையில் மறியலில் ஈடுபட்ட 27 பேரும், மணவாளக்குறிச்சியில் மறியலில் ஈடுபட்ட 21 பேரும், இரணியலில் மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 22 பேரும் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 பெண்கள் உள்பட 171 தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மார்த்தாண்டம்
மார்த்தாண்டத்தில் நேற்று மாலை தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் குழித்துறை நகர செயலாளர் பொன் ஆசைதம்பி, கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், ததேயு பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story