மாதவரம் பால்பண்ணையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 60–வது தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி.
செங்குன்றம்,
இவர், மாத்தூர் மஞ்சம்பாக்கம் ஜங்சன் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், தேனியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.
அவருடைய மனைவி லிஷா(வயது 37), நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு ஓட்டலுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.14 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story