போலீஸ் துறையை எனக்கு ஒதுக்கினால் சிறப்பாக நிர்வகிப்பேன் மந்திரி ரமேஷ்குமார் பேட்டி
பதவியின் மீது எனக்கு ஆசை இல்லை. ஆனால் போலீஸ் துறையை எனக்கு ஒதுக்கினால் சிறப்பாக நிர்வகிப்பேன் என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
கோலார் தங்கவயல்,
பதவியின் மீது எனக்கு ஆசை இல்லை. ஆனால் போலீஸ் துறையை எனக்கு ஒதுக்கினால் சிறப்பாக நிர்வகிப்பேன் என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
மந்திரி ரமேஷ்குமார் பேட்டிகர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரியும், கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ரமேஷ்குமார் நேற்று கோலாரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளிடம் அதிகளவில் பணம் வசூலிப்பதாக நாளுக்கு நாள் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு நோயாளிகள் இறந்தாலும் கூட மருத்துவமனை நிர்வாகம் பல லட்சம் ரூபாய் நோயாளியின் உறவினர்களிடம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இதனை தடுக்க மாநில அரசு விரைவில் ஒரு சட்டத்தை இயற்ற உள்ளது.
மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு அவரின் நோயின் தன்மை குறித்து அறிந்து அதற்கு ஏற்ப பணம் வசூலிப்பது பற்றி அரசு, தனியார் மருத்துவமனைகளில் விளம்பர பலகை வைக்க உள்ளது.
இதனால் கூடுதலாக தனியார் மருத்துவமனைகள் பணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும். பொதுமக்களும் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பாக நிர்வகிப்பேன்இதையடுத்து போலீஸ் மந்திரி பதவி உங்களுக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மந்திரி ரமேஷ்குமார் கூறும்போது, “எனக்கு பதவியின் மீது ஆசை இல்லை. எனக்கு மாநில அரசு சுகாதாரத்துறையை ஒதுக்கியது. அந்த துறையை நான் சிறப்பாக கவனித்து வருகிறேன். அதேப்போல் போலீஸ் துறையை ஒதுக்கினாலும் அந்த துறையையும் சிறப்பாக நிர்வகிப்பேன்“ என்றார்.