வருவாய் ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது
வந்தவாசி தாலுகா சென்னாவரம் கிராம உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணிபுரிபவர் எஸ்.ஆனந்தகுமார் (வயது 43).
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா சென்னாவரம் கிராம உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணிபுரிபவர் எஸ்.ஆனந்தகுமார் (வயது 43). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(44). இவர் அந்த பகுதியில் உள்ள குளத்து புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட அனுமதி கேட்டார். குளத்து புறம்போக்கு பகுதியில் வீடு கட்ட அனுமதியில்லை என வருவாய் ஆய்வாளர் எஸ்.ஆனந்தகுமார் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், சென்னாவரம் வருவாய் ஆய்வாளர் அலுவலத்திற்கு சென்று வருவாய் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அரசு பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அனந்தகுமார் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப் பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தார்.
Related Tags :
Next Story