கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 29).
வண்டலூர்,
இவர் நேற்று முன்தினம் இரவு ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,500–ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடியது. இது குறித்து திருமுருகன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து திருமுருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட காரணைப்புதுச்சேரியை சேர்ந்த டேவிட் (வயது 26), கூடுவாஞ்சேரியை சேர்ந்த பிரகாஷ் (26), அன்பரசன் (22), அருண்குமார் (24) மற்றும் நந்திவரம் பகுதியை சேர்ந்த கோபால் (22) ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story