உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா மங்காளக்கோவில் கண்ணுக்குடிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா மங்காளக்கோவில் கண்ணுக்குடிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தமிழக சட்டசபை கூட்ட தொடரில் மீனவர் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், மாட்டு இறைச்சி சட்டம் போன்றவற்றுக்கு முடிவு காணும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள கடுமையான குடிநீர் பிரச்சினையை போக்க முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் முதல்–அமைச்சர் தலைமையில் ஆட்சி நடைபெறவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தான் ஆட்சி நடத்துகின்றனர். தமிழகத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அமைத்து திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலுக்கு நடிகர்கள் வருவது அவர்களது ஜனநாயக உரிமை, என்றார்.