ரே‌ஷன் கடை, அங்கன்வாடி மைய பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு


ரே‌ஷன் கடை, அங்கன்வாடி மைய பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 16 Jun 2017 2:46 AM IST (Updated: 16 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி கருங்காலக்குடியில் 2 ரே‌ஷன் கடைகள் எதிர் எதிரே செயல்பட்டு வருகின்றன. நேற்று காலை இந்த 2 ரே‌ஷன் கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி கருங்காலக்குடியில் 2 ரே‌ஷன் கடைகள் எதிர் எதிரே செயல்பட்டு வருகின்றன. நேற்று காலை இந்த 2 ரே‌ஷன் கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ஒரு கடையில் 350 சோப்புகள், 200 சேமியா பாக்கெட்டுகள், 100 டீத்தூள் பாக்கெட்டுகள், 2 மூடை சீனி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. மற்றொரு கடையின் பூட்டை உடைக்க முடியாமல் கொள்ளையர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

மேலும் ரே‌ஷன் கடைக்கு அருகே இருந்த அங்கன்வாடி மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் சிலிண்டர் மற்றும் குக்கரை திருடிச்சென்றுள்ளனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்த இந்தக் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் இரவு நோந்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story