குடிமராமத்து பணிகளால் கடைக்கோடி பகுதிக்கும் குறைவின்றி நீர் கிடைக்கும் கலெக்டர் தகவல்
குடிமராமத்து பணிகளால் கடைக்கோடி பகுதிக்கும் குறைவின்றி நீர் கிடைக்கும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.
ஈரோடு,
தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரி, தண்ணீர் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்காக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். இதில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.4 கோடியே 28 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இந்த தொகையில் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் விவசாய நிலங்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் 63 பகுதிகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். அரசின் நிதியோடு தனியார் அமைப்புகளின் பங்களிப்பையும் பெற்று ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர் பார்வையிட்டார்
குறிப்பாக கீழ்பவானி திட்ட பகிர்மான கால்வாய்களில் மராமத்து பணிகள் 39 இடங்களில் செய்யப்பட்டு வருகிறது. காலிங்கராயன் வாய்க்காலில் 3 இடங்களிலும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் 5 இடங்களிலும், தடப்பள்ளி வாய்க்காலில் 9 இடங்களிலும், மேட்டூர் மேற்கு கரை வாய்க்காலில் 7 இடங்கள் என்று 63 பகுதிகளில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் அறச்சலூர், விளக்கேத்தி, கருமாண்டம்பாளையம், ஆராம்பாளையம் பகுதிகளில் நடந்து வரும் பணிகளை அவர் பார்வையிட்டார்.
அவருடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குழந்தைசாமி, உதவி செயற்பொறியாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், ஜெகதீஸ், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ச.விக்னேஷ், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் தே.ராம்குமார், சரன் உள்பட பலர் இருந்தனர்.
அறிவுரை
குடிமராமத்து பணிகள் மூலம் வாய்க்கால்களில் வளர்ந்து இருக்கும் முட்புதர்களை அகற்றும் பணிகள், கால்வாயில் வண்டல் மண் தேங்கி உள்ள இடங்களில் தூர்வாருதல் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கால்வாய் கரைகள் பலவீனமாக இருக்கும் இடங்களில் மண் கொட்டி அகலப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பழுதடைந்த குறுக்கு கட்டுமானங்களை புதுப்பிக்கவும் உத்தரவிட்டார். கூடுதல் தடுப்பு சுவர்கள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதுபற்றி கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறியதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள மாவட்ட அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மிகவும் ஒத்துழைப்பு தருகிறார்கள். குறிப்பாக குடிமராமத்து பணிகள் தொடங்கிய நாள் முதல் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியும் வருகிறார்கள்.
45 பணிகள் முடிந்தன
ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகளும் மிகுந்த அக்கறையுடன் ஒத்துழைப்பு தருகிறார்கள். இதனால் பணிகள் தொய்வு இன்றி சிறப்பாக நடக்கிறது. இந்த பணிகளை கீழ்பவானி முறைநீர் பாசன சபை நிர்வாகிகள் மற்றும் தடப்பள்ளி பாசன சங்க நிர்வாகிகள் மேற்பார்வை செய்து வருகிறார்கள்.
இதுவரை கீழ்பவானி திட்டத்தில் 28 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. காலிங்கராயன் பாசன பகுதியில் 3 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 3 பணிகளும் நிறைவு பெற்று உள்ளன. இதுபோல் தடப்பள்ளியில் 9 பணிகளும், அரக்கன்கோட்டையில் 5 பணிகளும் என மொத்தம் 45 பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன.
கடைக்கோடி வரை
குடிமராமத்து பணிகள் முழுமையாக முடியும்போது அனைத்து பாசனங்களிலும் கடைக்கோடி பாசன நிலங்களுக்கும் தண்ணீர் குறைவின்றி கிடைக்கும். மேலும் தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். நீர் சேமிப்பும் அதிகரிக்கும். பாசன நிலங்களில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பும் அதிகமாகும்.
இதுபோல் வாய்க்கால் கரைகள் பலப்படுத்தப்படும் பணிகளும் நடந்து வருவதால் விவசாயிகள் தங்கள் தேவைக்காக வாகனங்கள், டிராக்டர்களை கடைமடை வரை கொண்டு செல்ல முடியும்.
இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

Related Tags :
Next Story