ராகுல்காந்தியை தடுப்பதா? மத்திய பிரதேச அரசுக்கு சிவசேனா கண்டனம்


ராகுல்காந்தியை தடுப்பதா? மத்திய பிரதேச அரசுக்கு சிவசேனா கண்டனம்
x
தினத்தந்தி 15 Jun 2017 11:53 PM GMT (Updated: 2017-06-16T05:22:55+05:30)

பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு நல்ல ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு நல்ல ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மண்ட்சவுர் மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனால், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் பலியாகினர்.

இது தவிர போலீசார் தாக்கியதில் பத்வான் கிராமத்தை சேர்ந்த 26 வயது விவசாயி ஒருவரும் உயிர் இழந்தார். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசம் வந்தார். அப்போது, அவரை போலீசார் அனுமதிக்க மறுத்ததுடன், அவரை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா, ‘‘இது ஜனநாயக சீர்கேடு. எதிர்க்கட்சி தலைவருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே சுவர் எழுப்புவது தவறானது’’ என்று ‘சாம்னா’ பத்திரிகையின் தலையங்கத்தில் நேற்று கூறியிருக்கிறது.


Next Story