மர்ம காய்ச்சலால் குழந்தைகள் உள்பட 100 பேர் பாதிப்பு

செங்கம் அருகே புளியம்பட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கம்,
செங்கம் அருகே புளியம்பட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாந்தி–வயிற்றுப்போக்குசெங்கம் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை. மாறாக அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு காய்ச்சல் தீவிரமானது. தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் புளியம்பட்டி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் குழந்தைகள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முடங்கி உள்ளனர்ஒரே வீட்டில் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
எனவே சுகாதார துறையினர் புளியம்பட்டி கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கிராமத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.