வேலூர் மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றக்கோரி நளினி உண்ணாவிரதம்


வேலூர் மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றக்கோரி நளினி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:30 AM IST (Updated: 16 Jun 2017 11:52 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி நளினி தன்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்து வருவதாக நேற்று தகவல் வெளியானது.

வேலூர்,

வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினி தன்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்து வருவதாக நேற்று தகவல் வெளியானது. இதுகுறித்து அறிந்த அவரது வக்கீல் புகழேந்தி நேற்று மாலை அங்கு சென்று நளினியை சந்தித்து பேசினார்.

பின்னர் வெளியே வந்த வக்கீல் புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வேலூர் சிறை கண்காணிப்பாளரும், பெண்கள் சிறையின் சில அலுவலர்களும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தன்னை துன்புறுத்துவதாக நளினி கூறினார். இதனால் தன்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என்று கடந்த 12–ந்தேதி தமிழக சிறைத்துறை தலைவருக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் மனு அளித்து உள்ளார். இந்த மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 13–ந்தேதி முதல் சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்’’ என்று தெரிவித்தார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைத்துறை அதிகாரிகள் நளினியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அப்போது அவர் கூறினார்.


Next Story