பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு பின்னர் பதிவு செய்ய நீதிமன்றத்துக்கு மீண்டும் அதிகாரம் வழங்கக்கோரி வக்கீல்கள் போராட்டம்


பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு பின்னர் பதிவு செய்ய நீதிமன்றத்துக்கு மீண்டும் அதிகாரம் வழங்கக்கோரி வக்கீல்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:45 AM IST (Updated: 17 Jun 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு பின்னர் பதிவு செய்ய நீதிமன்றத்துக்கு மீண்டும் அதிகாரம் வழங்கக்கோரி வக்கீல்கள் போராட்டம்

திண்டுக்கல்,

திண்டுக்கல் வக்கீல் சங்கம் சார்பில், திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் அனந்தமுனிராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். அப்போது பிறப்பு–இறப்பு பதிவை ஓராண்டுக்குள் செய்யாமல் போனால் நீதிமன்றம் மூலம் பதிவு செய்யலாம் என்பதை மாற்றக்கூடாது என்றும், நீதிமன்ற கட்டண உயர்வை குறைக்கக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து திண்டுக்கல் வக்கீல் சங்கத்தினர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், தமிழ்நாடு பிறப்பு–இறப்பு பதிவு சட்டம் மற்றும் விதியின்படி ஓராண்டு காலத்தில் பிறப்பு, இறப்பை பதிவு செய்யாமல் போனால், நீதிமன்றம் மூலம் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ஆர்.டி.ஒ.–வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஓராண்டுக்குள் செய்யாத பிறப்பு, இறப்பை பதிவு செய்வதற்கு மீண்டும் நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.


Next Story