டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:15 AM IST (Updated: 17 Jun 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

எடமேலையூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

வடுவூர்,

வடுவூர் அருகே உள்ள எடமேலையூர் கிராமத்தில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு கடந்த 6–ந்தேதி மேலும் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த 2 கடைகளால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி நேற்று அங்குள்ள நூகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் நிலையம் வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மகளிர் சுய உதவிகுழு நிர்வாகிகள் கோகிலா, முத்துலட்சுமி மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நீடாமங்கலம் தாசில்தார் குணசீலி, டாஸ்மாக் தாசில்தார் கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோகன் (மன்னார்குடி), இனிகோதிவ்யன் (கோட்டூர்) ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.


Next Story