திருவாரூர் மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்


திருவாரூர் மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:00 PM GMT (Updated: 16 Jun 2017 8:18 PM GMT)

திருவாரூர் மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.19 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறுவை தொகுப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாதன்,

தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் சேதுராமன் ஆகியோர் பேசினர். இதில் வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், துணை இயக்குனர் சிவக்குமார், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நிதி ஒதுக்கீடு

குறுவை சாகுபடியை ஊக்குவிக்கின்ற வகையில் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. நெல்லுக்கு மாற்றாக பயறு வகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளவும், மண் வளத்தினை அதிகரித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருவாரூர் மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.19 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு குறுவை பருவத்தில் நெல் 37 ஆயிரத்து 850 ஏக்கர் பரப்பில் குறுவையும், 39 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பில் உளுந்தும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story