சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி 2,300 மாணவர்கள் கை விரல்களால் வரைந்த உலக சாதனை ஓவியம்
சேலத்தை அடுத்த குண்டுகல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
சேலம்,
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகின் மிக நீளமான ஓவியம் வரையும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமை தாங்கினார்.
உலக சாதனை படைக்கும் ஓவியம் வரையும் நிகழ்ச்சியை சிங்கப்பூர் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமியை சேர்ந்த டாக்டர் கே.செந்தில்குமார், இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமியை சேர்ந்த பி.ஜெகநாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்சை சேர்ந்த ராஜ்கிருஷ்ணா ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
1–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் 2,300 மாணவ–மாணவிகள் பள்ளி வளாகத்தில் தங்களது வலது கை விரல்களை தூரிகைகளாக பயன்படுத்தி மரங்களை வளர்ப்போம், மழைநீர் சேகரிப்போம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையிலான பலவித ஓவியங்களை 1,000 மீட்டர் நீளமும், 110 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட வெள்ளைத்துணியில் 6 விதமான வண்ணங்களை கொண்டு ஓவியம் வரைந்து உலக சாதனை படைத்தனர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய ஓவியம் வரையும் நிகழ்ச்சி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் ஓவிய சாதனையில் பங்கேற்ற மாணவ–மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.