பெண் டாக்டர் ஆடை மாற்றும் வீடியோவை ‘வாட்ஸ்–அப்’பில் பரப்பிய பயிற்சி டாக்டர் கைது
மும்பை ஜூகு பகுதியில் கூப்பர் மாநகராட்சி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தான் ஆடை மாற்றும் காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் பரவியது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
மும்பை,
மும்பை ஜூகு பகுதியில் கூப்பர் மாநகராட்சி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தான் ஆடை மாற்றும் காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் பரவியது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் விசாரித்தபோது, அதே ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருந்து வரும் யோகேந்திர ஜெய்ஸ்வர்(வயது29) என்பவர் அந்த வீடியோவை ‘வாட்ஸ்–அப்’பில் பரப்பியது தெரியவந்தது.
இது குறித்து பெண் டாக்டர் ஜூகு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பயிற்சி டாக்டர் யோகேந்திர ஜெய்ஸ்வரை அதிரடியாக கைது செய்தனர். போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் வேறு ஒரு பெண் டாக்டர் ஆடை மாற்றும் வீடியோவும் இருந்தது. இதுகுறித்து போலீசார் கைது செய்யப்பட்ட பயிற்சி டாக்டரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.