மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 4 பேர் பலி சாவு
மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.
மும்பை
மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.
பன்றிக்காய்ச்சல்மும்பையில் மழைக்கால நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மழை தீவிரமடைவதற்கு முன்னாலேயே பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. நோய்களால் பாதிக்கப்பட்ட பலரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு மட்டும் பெண்கள் உள்பட 7 பேர் பலியாகி இருந்தனர்.
இந்தநிலையில், நகரில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து உள்ளது.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைஇதுதவிர பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 177 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குடல் அழற்சி நோயால் 436 பேரும், மலேரியா காய்ச்சலால் 166 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 128 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தேங்கி கிடக்கும் மழைநீரில் நடப்பதை தவிர்க்கும்படியும், தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.