தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு


தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு
x
தினத்தந்தி 25 Jun 2017 4:15 AM IST (Updated: 24 Jun 2017 11:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பாரதிதாசன் 1–வது தெருவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு.

தாம்பரம், 

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பாரதிதாசன் 1–வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). கட்டிட ஒப்பந்ததாரர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் படுக்கை அறையில் படுத்து தூங்கினார்.

அப்போது வீட்டின் ஜன்னல் கிரில் கம்பியை கழற்றி உள்ளே புகுந்த மர்மநபர்கள், சீனிவாசன் குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்த அறை கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு, மற்றொரு அறையில் உள்ள பீரோவில் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று விட்டனர். இதையடுத்து மர்மநபர்கள், பாரதிதாசன் 2–வது தெருவில் உள்ள குமரன் (44) வீட்டின் பின்புற ஜன்னல் கிரில் கம்பிகளை கழற்றி உள்ளே புகுந்தனர். பின்னர் குமரன் குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்த அறை கதவை வெளிப்புறமாக பூட்டி துணியால் கட்டி விட்டு, பக்கத்து அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர். 

இதுபற்றி தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம
நபர்களை தேடி வருகின்றனர்.
1 More update

Next Story