செங்குன்றத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்


செங்குன்றத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-24T23:32:06+05:30)

செங்குன்றம்–திருவள்ளூர் கூட்டு சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் மற்றும் 20–க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் பறிமுதல்.

செங்குன்றம்,

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேந்திரன் ஆகியோர் செங்குன்றம்–திருவள்ளூர் கூட்டு சாலை, பாடியநல்லூர் செக்போஸ்ட், மாத்தூர் மஞ்சம்பாக்கம் ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் மற்றும் 20–க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். அவற்றுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு, கூடுதலாக ஏற்றி வரப்பட்ட சரக்குகளை வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பல நாட்களாக வாகன பதிவு செய்யாமல் ஓட்டி வந்த 20–க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

வாகன சோதனையின் போது டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்களின் அசல் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story