டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-25T23:17:48+05:30)

கடையம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையம்,

நெல்லை மாவட்டம் கடையம் யூனியன் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து மயிலப்பபுரம் நான்கு வழி ரோட்டில் வடபுறம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 9–ந் தேதி அகிம்சை வழியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எந்தவித பலனும் கிடைக்காதால் கடந்த 25–ந் தேதி இரவு இப்பகுதி மக்கள் சிறப்பு கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில், சத்யாகிரக பாதையில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை டாஸ்மாக் கடை எதிரே பொதுமக்கள் பெரிய பந்தல் அமைத்து அகிம்சை வழியில் தொடர் போராட்டத்தை தொடங்கினர். இதில் ராட்டை நூற்று போராட்டம் நடத்தினர்.

மதுவின் தீமைகள்


இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது. நேற்றைய போராட்டத்தின் போது, மதுவின் தீமைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர். போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். அரியப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜாண் ஜெயபால், சந்திரசேகர், கணேசன், ராமர், பூசைத்துறை, அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பெண்கள் மதுவை குடிப்பது போல் நடித்தும், பெண்கள் குடிக்க ஆரம்பித்தால் குடும்பம் எவ்வாறு சீரழியும் என்று நடித்துக் காட்டி போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story