மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2017 9:45 PM GMT (Updated: 2017-06-26T01:27:44+05:30)

கொருக்குப்பேட்டையில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ராயபுரம்,

சென்னை கொருக்குப்பேட்டை சிகரிந்தபாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையால் அந்த பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த மதுக்கடையை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர்.

மதுக்கடைக்கு முன்னதாகவே அவர்களை ஆர்.கே.நகர் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.


Next Story