என்.ஐ.டி.யில் டெக்னீசியன் வேலை


என்.ஐ.டி.யில் டெக்னீசியன் வேலை
x
தினத்தந்தி 26 Jun 2017 7:05 AM GMT (Updated: 2017-06-26T12:34:49+05:30)

இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. தற்போது ரூர்கேலாவில் செயல்படும் என்.ஐ.டி. கல்வி மையத்தில் கற்பித்தல் சாராத டெக்னீசியன், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூப்பிரண்டென்ட் மற்றும் அக்கவுண்டன்ட் பணிக்கு 10 இடங்கள், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் - 52, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (நூலகம்) - 2, ஜூனியர் அசிஸ்டன்ட் - 31, டெக்னீசியன் - 44, லேப் அசிஸ்டன்ட் - 14 இடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. 3-7-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஓ.பி.சி. மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nitrkl.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 3-7-2017-ந் தேதியாகும். 

Next Story