எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் நர்சிங் படித்தவர்களுக்கு 1411 வேலைவாய்ப்புகள்


எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் நர்சிங் படித்தவர்களுக்கு 1411 வேலைவாய்ப்புகள்
x
தினத்தந்தி 26 Jun 2017 7:17 AM GMT (Updated: 2017-06-26T12:47:13+05:30)

எய்ம்ஸ் மருத்துவ மையங் களில் நர்சிங் படித்தவர்களுக்கு 1411 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் எய்ம்ஸ் (AI-I-MS) என்று அழைக்கப்படுகிறது. புதுடெல்லியை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மைய கிளைகள் செயல்படுகின்றன. தற்போது இதன் கிளைகளில் ஸ்டாப் நர்ஸ் மற்றும் அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் கிளையில் 1154 பணியிடங்கள், புதுடெல்லியில் 257 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

ரிஷிகேஷ் 1154 பணிகள்

ரிஷிகேஷ் கிளையில் ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-2) பணிக்கு 1126 பணியிடங்களும், அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட் (குரூப்-ஏ) பணிக்கு 28 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

ஸ்டாப் நர்ஸ் பணிகளுக்கு 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட் பணிக்கு 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 31-7-2017-ந் தேதியை அடிப்படையாக கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

பி.எஸ்சி. நர்சிங் 4 வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட் பணிக்கும், 2 வருட சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் ஸ்டாப் நர்ஸ் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:


எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-7-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை
www.aiimsrishikesh.edu.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

புதுடெல்லியில் 257 பணிகள்


புதுடெல்லி எய்ம்ஸ் கிளையில் நர்சிங் ஆபீசர் பணிக்கு 257 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

பி.எஸ்சி. நர்சிங் படித்து, நர்ஸ் மற்றும் நர்ஸ்- மிட்வைப் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்சிங்-மிட்வைபரி டிப்ளமோ படிப்புடன் குறிப்பிட்ட அனுபவம் இருப்பவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 14-7-2017-ந் தேதியாகும்.

இதற்கான எழுத்துத் தேர்வு 11-9-2017-ந் தேதி நடத்தப்பட உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsexams.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story