மனைவி தற்கொலை வழக்கில் ராணுவ அதிகாரி கைது
சென்னையை அடுத்த சேலையூர் சுந்தரம் காலனி, 2–வது தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(வயது 42).
தாம்பரம்,
சென்னையை அடுத்த சேலையூர் சுந்தரம் காலனி, 2–வது தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(வயது 42). இவர், நாகாலாந்தில் உள்ள இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மீரா(36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ள ரங்கநாதனுக்கும், அவருடைய மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனம் உடைந்த அவருடைய மனைவி மீரா, திராவகத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், ரங்கநாதன் கொடுமைப்படுத்தியதால் அவர் இறந்து விட்டதாகவும் அவருடைய தந்தை சுந்தர்ராஜன் அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதனிடம் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ அதிகாரி ரங்கநாதனை சேலையூர் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.