உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நேற்று வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உவரி,
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நேற்று வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுயம்புலிங்க சுவாமி கோவில்நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக விழாவையொட்டி நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி, மாலையில் கலச பூஜை, பிரவேச பலி ஆகியவை நடந்தது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது. அதன்பிறகு விநாயகர் வணக்கத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் விமான அபிஷேகமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. முன்னதாக, கோவில் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கும்ப ஊர்வலம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சுவாமி வீதிஉலாஇரவில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் முருகேசன், துணை தலைவர் கனகலிங்கம், தொழில் அதிபர்கள் அன்னை ரவி, ஓம் சர்மா ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.






